சமீப காலமாக கல்ஹின்னையில் நடந்துகொண்டிருக்கும் நிர்வாக சபை தெரிவுக்கான் சர்ச்சைகளை பற்றிய செய்திகள், "கல்ஹின்னை டுடே பத்திரிகைக்கு அதிகமாக கிடைத்தது.
அதில் முக்கியமாக முஸ்லிம் ஹாஜியார்,ஜிப்ரி ஹாஜியார்,மற்றும் பசீர் ஹாஜியார் போன்றவர்களுக்கு ஆதரவாக எழுதியிருந்தார்கள்.
ஒரு சிலர் கல்ஹின்னை மக்களுக்கு ஆதரவாக எழுதியிருந்தார்கள்.அது நல்ல விடயம் என்றாலும் ஹஜியார்களை அவதூறாக சித்தரித்து எழுதியிருந்தார்கள்.
எந்த ஒரு ஆக்கமாயிருந்தாலும் ஒழுக்கத்தை பேணி எழுத வேண்டும்.அது ஊர் மக்களுக்கு எதிராக எழுதப்பட்டாலும் ,தனவந்தர்களுக்கு எதிராக எழுதப்பட்டாலும் மரியாதையான வார்த்தைகளை பாவித்து எழுத வேண்டும்.
சிலர் பெயரை குறிப்பிடாமல் புனைப்பெயரில் எழுதியிருந்தார்கள்.அவர்கள் கல்ஹின்னை மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் கை நீட்டிப் பிழைக்கின்ற கூட்டம் என்பது நன்றாகப் புரிந்தது.
அவதூறுகள் பரப்பும் செய்திகளையும் தவிர்த்து வருகின்றோம்.
ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து கல்ஹின்னை டுடேயில் பதிவிட்டோம்,
"கல்ஹின்னை டுடே" மற்றும் "வேட்டை" பத்திரிகைகளில் சிலருக்கு ஆதரவாக எழுதவில்லை என்ற காரணத்தால் ஒரு சில பத்திரிகைகள் கல்ஹின்னையில் புற்றீசல்கள் போன்று கிளம்பியுள்ளன.
அதில் globelnews8.blogspot.com - இணையதளத்தில் வரும் எந்த ஒரு செய்திகளுக்கும் ,"கல்ஹின்னை டுடே" மற்றும் "வேட்டை" பொறுப்பள்ள என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆகவே போலியான செய்திகளை தவிர்த்துக்கொள்ளவும்